LIVE | கரூரில் த.வெ.க சார்பில் நினைவுச் சின்னம்..!- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி.
TN CM Vijay in Karur

ரோடு ஷோ

TN CM Vijay

கரூர் சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் ரோடு ஷோ நடத்துகிறார். கரூரில் திருக்காம்புலியூர் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை 10 கிமீ தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்துகிறார்.

ரோடு ஷோ செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

திறந்தவெளி வாகனத்தில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி முதலமைச்சர் விஜய் செல்கிறார்.

ஓடி ஓடி ஒளிந்துக்கொள்ளும் கரூர் கம்பெனி ஓனர்..

முதலமைச்சர் விஜய்,"கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கிருக்கார் என்றே தெரியாத அளவுக்கு ஓடு ஓடு என ஓடுகின்றனர். மற்றொருவர் சிங்கப்பூரில் ஒளிந்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் சாரை சொல்லவில்லை.. எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் தனி பாசம் உண்டு.

ஒழுங்கா படி ஒழுங்கா படி என உச்சநீதிமன்றம் சம்மட்டியால் அடித்தும் திமுக விழித்துக் கொள்ளவில்லை.

தீய சக்தியை திருத்தவும் முடியாது, எனவே அவர்களை இடைத்தேர்தலில் அவர்களை வெளுத்து விடுங்கள்.

தாங்கள் ஆட்சியில் இருப்பதாக நினைத்து கரூருக்கு முதல்வர் செல்லக்கூடாது என திமுக சொல்கிறது" என்றார்.

கரூர் சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் ரோடு ஷோ நடத்துகிறார். கரூரில் திருக்காம்புலியூர் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை 10 கிமீ தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்துகிறார்.

ரோடு ஷோ செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

திறந்தவெளி வாகனத்தில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி முதலமைச்சர் விஜய் செல்கிறார்.

கரூரில் நினைவுச் சின்னம்..

முதலமைச்சர் விஜய்," என் மனதை விட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது. அரசியல் சூழ்ச்சியை இனி யாரும் யோசிக்க கூடாது என்பதற்காக கரூர் கூட்ட நெரிசலில் பலி சம்பவத்திற்காக நினைவுச்சின்னம்.

ஓட்டுக்கு காசு தரும் கலாச்சாரத்தை அடித்து நொறுக்கிய நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டகம் பேரம்?

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் வெவ்வேறு ஆட்கள் இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள்" என்றார்.

Talk Less, Work More..

முதலமைச்சர் விஜய்,"அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலாக்கப்படும். தீய சக்தியை போல் ரீல் தாய்மாமன் அல்ல, நான் ரியல் தாய்மாமன்.

பேசுங்க பேசுங்க என்கிறீர்கள்.. பேசினால் எழுந்து ஓடிவிடுகிறீர்கள், பேசுவதற்கு முன் கதவை மூடிவைத்துவிட்டு பேச வேண்டும் போல. 5 நிமிடம் நான் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்.

Talk Less, Work More என்பதே எனது கொள்கை. தொகுதி மறுவரையறையை தமிழகம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது" என்றார்.

தவெக ஆட்சியில் மக்கள் பெருமூச்சு..

முதலமைச்சர் விஜய்,"கட்சி நிதி என்று சொன்ன உடனாயே சட்டப்பேரவையில் இருந்து எப்படி ஓடினர்கள் தெரியுமா? எங்க அப்பா பீரோவுக்கு இல்லை என்பது போல் கேலி கூத்தாக செயல்படுகின்றனர். காதில் இருந்து ரத்தம் வராத குறையாக எல்லா பக்கமும் கதறல்கள். அரசு அலுவலகங்களில் ஊழல் இன்றி வேலை தொடர்ந்து நடக்கிறது. மரியாதை அளித்து பேசுவதாக முதியவர் கூறுகிறார்.

தவெக ஆட்சியில் மக்கள் பெருமூச்சு விடுவதை பார்க்கையில் அப்படி ஒரு மன நிம்மதி எனக்கு. விவசாயிகளே உங்கள் நலனுக்காக தவெக அரசு கூடவே நிற்கும். "L&T நிறுவனத்தின் ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார் விஜய்.

முதலமைச்சர் விஜய்,"வலியுடன் வீட்டில் இருந்த என்னை ஓடி ஔிந்துவிட்டான் என சொல்வீர்களா? வாய் என ஒன்று இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்களா? வலியுடன் உள்ள என்னை ஏளனமாக பேசி, என் மீது பழிப் போடுவதா?

சட்டப்பேரவையில் ஸ்டாலின் சார் நம்ம மேல் அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்வது என்ன நியாயம்? நமக்கு வலி தந்த அனைவருக்கும் 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்,

மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். காலத்திற்கு அவர்கள் எழுந்திராத வகையில் தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.

பணமா, ஜனமா என்றால் எனக்கு என் ஜனம் தான் முக்கியம்" என்றார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள்...

TN CM Vijay

என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்.

அப்போது அவர்," ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் சில வலி, காயங்களை மறக்க முடியாது. கரூர் சம்பவம் தான் அதிக வலி தருவதாய் மனதில் உள்ளது.

கரூர் நான் வந்தபோது, எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் என போலீசார் சொல்லியிருக்கலாம். காவல்துறையினர் எங்களிடம் கேட்காமலே கூட நிகழ்வை ரத்து செய்திருக்கலாமே?

நெடுஞ்சாலையில் இருந்து போலீசாரே அழைத்து வந்த நாடகத்தை நான் நம்பிவிட்டேன். திரையில் எனது படம், பாடலை பார்த்து முத்தம் கொடுத்த எனது சகோதரியின் பிள்ளைகளை இழந்துள்ளோம்" என்றார்.

இனி விஜய் தான் நிரந்தரம்..

MR Vijayabaskar

கரூருக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசளித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,"கடந்தாண்டு செப்டம்பரில் கட்சித் தலைவராக கரூர் வந்த ஜோசப் விஜய் தற்போது முதலமைச்சர் வந்துள்ளார்.

எம்ஜிஆர் உயிரோடிருக்கும் வரை 3 முறை முதலமைச்சராக இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

தமிழ்நாட்டில் இனிமேல் தளபதி விஜய் ஆட்சி தான். எங்கள் கட்சிக்கு வந்துட்டீங்களா என்று சின்ன பையன் என்னை கேட்கிறான். சின்ன பிள்ளைகள்கூட எங்கள் தளபதி கட்சி என கூறும் நிலையில் தவெக ஆட்சி தான் நிரந்தரம், நிரந்தர முதல்வர் விஜய்.

விடியலை தருகிறேன் என்று சொல்லிய திமுகவுக்கு மட்டும் தான் விடிந்தது, மக்களுக்கு விடியவில்லை. தமிழ்நாடு இனி தளபதி விஜய் கையில் தான் உள்ளது, தளபதியின் கரத்தை வலுப்படுத்த உயிரைக்கூட கொடுப்போம்.

அத்தனை சவால்களையும் தூற் தூளாக்கி தமிழகத்தில் தூய ஆட்சியை தருவார் முதலமைச்சர் விஜய்" என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரையாற்றினார்" என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரையாற்றினார்.

கரூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய அமைச்சர் விஜயலட்சுமி,"நெசவாளர் நெஞ்சம் குளிர கரூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சரை வரவேற்கிறேன்" என்றார்.

Minister Vijayalakshmi

தமிழ்த்தாய் வாழ்த்து..

கரூரில் நடைபெறும் முதலமைச்சரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபார்கள், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கை கொடுத்த வரவேற்றனர்.

கரூரில் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் செல்லும் நிலையில் இருபுறமும் வழிநெடுகிலும் திரண்டு மக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற ஊடகத்தினர் போலீஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் பிரதான அரங்குக்கு வெளியே உள்ள சிறிய அரங்கில் அமர காவல்துறை கட்டாயப்படுத்துகிறது.

செய்தி சேகரிக்க காவல் துறை சார்பில் செய்தியாளர், விரிவாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல். இதனால், செய்தியாளர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஊதா- கருப்பு நிற உடையில்..

கரூர் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருச்சி வி்மான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட முதலமைச்சர் விஜய் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் உடை அணிந்திருந்தார்.

புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல்

கரூர் மனவாசி ஊராட்சியில் ரூ.1700 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

QR குறியீடு உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 5000 பேருக்கு மட்டுமே கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் அனுமதி.

முதல்வரின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வருவோரின் வாகனங்கள் அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே பார்க்கிங்கில் அனுமதிக்கப்படுகிறது.

அனுமதித் சீட்டு இன்றி கார்களிலோ அல்லது பைக்கிலோ வருவோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை வழியாக கரூருக்கு புறப்பட்டார்.

கரூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில் இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் விஜய்..

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜயை காண காலையில் இருந்தே அட்லஸ் மைதானத்தில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com