காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு- மீன் பிரியர்கள் ஏமாற்றம்

பெரிய வகை மீன்களின் விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய வகை மீன்களையே மீன் பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.
Kasimedu fish market
Published on

காசிமேடு

காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

விசைப் படகு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 3 வாரங்களாக ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன. இதனால் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

ஆடி மாதம்

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் பிரியர்கள் அதிகாலையிலேயே தேவையான மீன்களை வாங்குவதற்கு காசிமேட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வரத்து குறைவினால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

சில்லறை விற்பனை

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளும் குறைவாகவே காணப்பட்டன.

மீன் பிரியர்கள்

பெரிய வகை மீன்களின் விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய வகை மீன்களையே மீன் பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.

பெரிய வகை மீன்கள்

வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால், ஷீலா, தேங்காய் பாறை, பால் சுறா, கொடுவா உள்ளிட்ட மீன் வகைகள் இருந்தும் விலை ஏற்றத்தின் காரணமாக மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விசைப் படகுகளில் இருந்து இறக்கப்படும் மீன்களை உணவகங்களுக்கு வாங்கி செல்வதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் மார்க்கெட்களுக்கு மீன்களை வாங்கி செல்பவர்கள் கூடை கூடையாக சிறிய வகை மீன்களையே வாங்கி செல்கின்றனர்.

காசிமேட்டில் மீன்கள் விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:

வஞ்சிரம்- 1100

கொடுவா- 900

தேங்காய் பாறை -800

ஷீலா- 800

பால் சுறா- 800

சங்கரா- 500

பாறை- 400

இறால்-400

நண்டு -300

நவரை -300

பண்ணா-300

காணங்கத்தை -300

கடுமா- 300

நெத்திலி-200.

X

Maalai Malar
www.maalaimalar.com