

அ.தி.மு.க.வில் இருந்து விலகி பல பேர் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் இணைப்பு விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் த.வெ.க.வில் இணைய உள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் சி.விஜயபாஸ்கர் இணைய உள்ள நிலையில், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.