கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டன - கனிமொழி

பல்வேறு தரப்பினரும் பாராட்டக்கூடிய தேர்தல் அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கை உள்ளது.
கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டன - கனிமொழி
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.யும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

* 64 வாக்குறுதிகளை அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பு, சூழல் காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.

* வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* மத்திய அரசின் ஒத்துழைப்பால் தான் நிறைவேற்ற முடியும் என்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை.

* வாக்குறுதி அளிக்காத காலை உணவு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், தாயுமானவன் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

* 80,000 கருத்துக்களைப் பெற்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

* நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி இருந்தார்.

* வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்து அறிக்கை தயாரித்துள்ளோம்.

* பல்வேறு தரப்பினரும் பாராட்டக்கூடிய தேர்தல் அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கை உள்ளது.

* அ.தி.மு.க. வாக்குறுதிகளை படிக்கவில்லை. அதற்கான நேரமும் கிடையாது.

* மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 என அறிவித்தபிறகு இ.பி.எஸ். அறிவிப்பு வெளியிடுகிறார்.

* மக்கள் பணம் மக்களுக்கே சென்று சேர்ந்தால் தான் அது பொருளாதார வளர்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com