50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த த.வெ.க நிர்வாகி- கனிமொழி குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
கனிமொழி
Published on

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com