அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எஸ்.ஜானகியின் உடல்.. இறுதி ஊர்வலம் தொடங்கியது

பண்ணை வீட்டில் ஜானகியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
S Janaki funeral
Published on

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாடகி எஸ்.ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்ட பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபின், மைசூருவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஜானகியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

மறைந்த ஜானகியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த கர்நாடக முதல் மந்திரி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூரில் இசை அரசி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. எஸ்.ஜானகியின் உடல் பண்ணை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கன்னியனஹீண்டி பண்ணை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com