சட்டமன்றத்தை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல - ஜெயக்குமார்

நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று மக்களின் தீர்ப்பால் முதலமைச்சரானது வரை விஜய்யின் நடிப்பு நன்றாகவே வளர்ந்து உள்ளது.
Jayakumar - CM Vijay
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா?

நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று மக்களின் தீர்ப்பால் முதலமைச்சரானது வரை விஜய்யின் நடிப்பு நன்றாகவே வளர்ந்து உள்ளது. வாழ்த்துகள்...

ஆனால் பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

5 நிமிடம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல என்று பஞ்ச் அடிக்கும் முதலமைச்சர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்கிறோம். மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சனைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிடமாச்சும் பேசுங்க ... ரீல்சை விட்டு விட்டு ரியாலிட்டிக்கு வாங்க.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com