முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்..!- முதலமைச்சர் விஜய்

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம்.
EX PM VP SIngh- TN CM Vijay
Published on

இந்திய குடியரசின் 7வது பிரதமரான வி.பி.சிங்கின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது சிலைக்கும், உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம்.

சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com