

அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில்,
தமிழ்நாட்டில் சமூக- சமய சீர்திருத்தத்தின் மூத்த முன்னோடியான பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181வது பிறந்த நாள் இன்று...
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்திலும் கருத்திலும் போராடிய மாபெரும் மெய்யியலாளர்.
தமிழர்களுடைய ஞான மரபின் பெருவெளிச்சமாய் திகழ்கின்ற பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்த நாளில் புகழ் வணக்கங்களையும் போற்றுதல்களையும் உரித்தாக்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.