த.வெ.க. அரசுக்கு IUML கட்சி ஆதரவு

ஜனநாயக விரோத சக்திகளின் சித்துவிளையாட்டில் தமிழ்நாடு சிக்கிவிடக்கூடாது.
த.வெ.க. அரசுக்கு IUML கட்சி ஆதரவு
Published on

த.வெ.க. அரசுக்கு IUML கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் IUML சட்டமன்றக்குழு தலைவர் ஷாஜகான் அறிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. பாபநாசம் சட்டமன்ற மக்களுக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி தலைவர் காதர் மொய்தீனுக்கும் நன்றி.

தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள். த.வெ.க. அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளிக்கிறது.

ஜனநாயக விரோத சக்திகளின் சித்துவிளையாட்டில் தமிழ்நாடு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க.விற்கு ஆதரவு. த.வெ.க. ஆட்சி மக்கள் போற்றும் நல்லாட்சியாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com