

மதுரை மத்தி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மத்தி தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.. இனி என் வாழ்வில் மாதம் 15 நாள் மதுரையில்தான் இருக்கும்.. அதை நான் உறுதிபடச் சொல்கிறேன்.
திரைத்துறையில் 30 ஆண்டுகளாக சிறப்பாக பணிப்புரிந்து இருக்கிறேன். அரசியலை அடுத்தகட்ட நகர்வாக பார்க்கிறேன். தேர்தல் முடிவை வைத்துதான் அடுத்தது என்ன என்பது முடிவு செய்யப்படும்.
விஜய் மீது நானும், என் மீது விஜயும் பெரும் மதிப்பும், அன்பும் கொண்டவர்கள். என் மனைவியும் விஜயை தம்பியை போல்தான் கருதுகிறார்.
அதனால், விஜய் பற்றி விமர்சிக்கவோ அல்லது கட்சி, வேட்பாளர் பற்றி விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை.
ஆனால், மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரையில், போட்டி இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.