

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத் துறை சோதனைக்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-
கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அமைப்புகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்து, இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்புகின்றன.
மேலும், "பினராயி விஜயனை ஏன் இன்னும் பாஜக குறிவைக்கவில்லை?" என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிய சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் பொய்மையையும் இது அம்பலப்படுத்துகிறது!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.