‘கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்’ - இபிஎஸ்

அதிமுக மோதல்களுக்கு மத்தியில் எனது செயல்பாட்டை கட்சித் தொண்டர்களும், தமிழ்நாடு மக்களும் நன்கு அறிவார்கள் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
‘கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்’ - இபிஎஸ்
Published on

அதிமுகவின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“2021-ல் கட்சி ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை,

கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கட்சித் தொண்டர்களும், தமிழ்நாடு மக்களும் நன்கு அறிவார்கள்.

“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கட்சி தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.

தமிழ்நாடு மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com