

தமிழகத்தில் கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி- மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை இன்று பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நாளை (2-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்பம் கொளுத்தியது.