

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல்லில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்தது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூரில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வரம் 26ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.
தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.