

சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வந்தது. இதனை தொடர்ந்து இந்த வாரமும் தங்கம் விலை காலையில் குறைவது மாலையில் உயர்வது என இருவேளையிலும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது தங்கம் கிராமுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,350-க்கும் சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
25-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800
24-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000
23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720
22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
25-03-2026- ஒரு கிராம் ரூ.260
24-03-2026- ஒரு கிராம் ரூ.250
23-03-2026- ஒரு கிராம் ரூ.250
22-03-2026- ஒரு கிராம் ரூ.250
21-03-2026- ஒரு கிராம் ரூ.250