

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து குறைய தொடங்கியது. கடந்த 23, 24-ந்தேதிகளில் மட்டும் காலையில் குறைவதும், மாலையில் அதிகரிப்பதுமான நிலையில் தங்கம் இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதேபோல் மாற்றம் இருக்குமோ? என எதிர்பார்த்த சூழலில், விலை திடீரென்று எகிறியது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 800-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
25-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800
24-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000
23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720
22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
25-03-2026- ஒரு கிராம் ரூ.260
24-03-2026- ஒரு கிராம் ரூ.250
23-03-2026- ஒரு கிராம் ரூ.250
22-03-2026- ஒரு கிராம் ரூ.250
21-03-2026- ஒரு கிராம் ரூ.250