

சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வந்தது. இதனால் இந்த வாரமும் தங்கத்தின் விலை குறையுமா? உயருமா? என்ற கேள்வி மக்களிடையே நிலவியது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.5,360-க்கும் கிராமுக்கு 670 ரூபாயும் குறைந்து ஒரு கிராம் ரூ.12,950-க்கும் சவரன் ரூ.1,03,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இரண்டாவது முறையாக தற்போதும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கும் சவரனுக்கு 2,240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மொத்தத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 7600 ரூபாய் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560
22-03-2026- ஒரு கிராம் ரூ.250
21-03-2026- ஒரு கிராம் ரூ.250
20-03-2026- ஒரு கிராம் ரூ.260
19-03-2026- ஒரு கிராம் ரூ.265
18-03-2026- ஒரு கிராம் ரூ.275