GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குட் நியூஸ்: ரூ.5000-க்கு மேல் குறைந்த தங்கம் விலை... நகை வாங்க சரியான நேரம்...

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குட் நியூஸ்: ரூ.5000-க்கு மேல் குறைந்த தங்கம் விலை... நகை வாங்க சரியான நேரம்...
Published on

சென்னை:

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வந்தது. இதனால் இந்த வாரமும் தங்கத்தின் விலை குறையுமா? உயருமா? என்ற கேள்வி மக்களிடையே நிலவியது.

இந்த நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 12,950-க்கும் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

22-03-2026- ஒரு கிராம் ரூ.250

21-03-2026- ஒரு கிராம் ரூ.250

20-03-2026- ஒரு கிராம் ரூ.260

19-03-2026- ஒரு கிராம் ரூ.265

18-03-2026- ஒரு கிராம் ரூ.275

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com