

போர்ச்சூழல் ஏற்படும் போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக எகிறும். ஆனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் உச்சத்தில் இருக்கும் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை நேற்று சற்றே உயர்ந்தது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960-க்கும், கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560
17-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200
16-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
20-03-2026- ஒரு கிராம் ரூ.260
19-03-2026- ஒரு கிராம் ரூ.265
18-03-2026- ஒரு கிராம் ரூ.275
17-03-2026- ஒரு கிராம் ரூ.280
16-03-2026- ஒரு கிராம் ரூ.276