"என்னை நீக்க அதிகாரம் இல்லை"- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி

தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞராக நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
Gnanasoundhari
Published on

வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.

ஞானசவுந்தரி விளக்கம்

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:-

என்னை கட்சியை விட்டு நீக்க விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம்.

முதல்வர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்துகிறார். அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன்" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீக்கம் ஏன்?

வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞராக நியமிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் ஞானசவுந்தரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் ஞானசவுந்தரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com