கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகள்- உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க logo-வையும் வெளியிட்டோம்.
கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகள்- உதயநிதி ஸ்டாலின்
Published on

திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திராவிட இயக்க சிந்தனையுடைய பேராசிரியர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக நடைபெற்ற 'திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின்' தொடக்க விழாவில் இன்று பங்கேற்றோம். திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க logo-வையும் வெளியிட்டோம்.

மாநிலங்களின் கல்வி உரிமையை அபகரித்து நாடெங்கும் கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் பணிகள் அமையட்டும் என்று வாழ்த்தினோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com