கோவில் திருவிழாவில் சாமி சிலை தீப்பிடித்து எரிந்ததை அணைக்க முயன்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாவில்  சாமி சிலை தீப்பிடித்து எரிந்ததை அணைக்க முயன்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தது. நேற்று சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து சாமிகள் டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது பெரிய புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே டிராக்டர் தீ பிடித்து எறிந்தது. இதனை தருமபுரி மாவட்டம், வனத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து சொக்கலிங்கம் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்று கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் மின்சார துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த மின் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com