

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் சிலர் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறியது குறித்த கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டம் நடக்கிறது. சூதாட்ட கும்பல் பரப்பும் வதந்திதான் அது. தேர்தலுக்கு முன் திமுக-வை முன்வைத்து சூதாட்டம் நடத்தினார்கள். தேர்தலுக்கு பின் விஜயை வைத்து நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவர்கள் ஏமாந்து போவார்கள்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.