TN Assembly Election | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இ.பி.எஸ் வழிபாடு- முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்

கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை இன்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
TN Assembly Election | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இ.பி.எஸ் வழிபாடு- முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்
Published on

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று அதிமுகவின் முழு தேர்தல் அறிக்கை வெளியானது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை இன்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று வெளியிட்ட நிலையில், இபிஎஸ் மந்தவெளி சந்தை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com