

அதிமுகவின் முன்னாள் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக துணைப் பொதுச்செயலாளருமான எம். ரெங்கசாமி இன்று திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனை ஆதரித்து தனது எம்.எல்.ஏ பதவியை இழந்த இவர், அதிமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறுது.
கடந்த 2021 தேர்தலில் அமமுக சார்பில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட ரெங்கசாமி சுமார் 19,000 வாக்குகள் பெற்றார். இந்தமுறையும் பாபநாசத்தில் போட்டியிடுவதற்கு தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டணியில் பாபநாசம் அமமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
திமுகவில் இணைந்தால் பாபநாசம் தொகுதியில் சீட் வேண்டும் என ரெங்கசாமி தரப்பில் டிமாண்ட் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அத்தொகுதி இவருக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.