

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அண்ணா, எம்ஜிஆா் மறைந்தாலும் அவா்களின் கொள்கைகளை பின்பற்றி தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறி உள்ளது.
அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டுமென்று தான் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.
தோ்தல் பிரச்சார நிகழ்ச்சியால் காஞ்சிபுரமே அதிா்கிறது, மக்களின் ஆரவார எழுச்சி, மக்களின் மகிழ்ச்சியை பாருங்கள் முதல்வரே.
பேரறிஞா் அண்ணா பிறந்த மண்ணில் நிற்பதே பாக்கியம், அவர் கண்ட கனவுகளை நனவாக்க எம்.ஜி.ஆர். பல திட்டங்களை கொண்டுவந்தார்; காஞ்சிபுரம் அதிமுகவின் கோட்டை.
சிறுபான்மையின மக்களை கண்ணை இமைகாப்பது போல் பாதுகாத்தது அதிமுக அரசு.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை பேசுகின்ற இடம் சட்டமன்றம். சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்போது திமுகவினர் செய்தது கொஞ்ச நஞ்சமா?
தீய சக்தி திமுகவில் இணைந்ததன் மூலம் ஓ.பி.எஸ். என்ற பூனைக்குட்டி வெளியில் வந்துள்ளது.
எட்டப்பனாக இருந்த ஒருவர் எதிரிகளோடு சேர்ந்து எதிராக வாக்களித்தார்.
அதிமுகவில் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் பதவி உயர்வு தேடி வரும் என தெரிவித்தார்.