திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியில்லை: கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி

காவிரி பிரச்சனைக்காக 37 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அதிமுக.
திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியில்லை: கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி
Published on

தஞ்சையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் அற்புதமான தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக அரசு.

காவிரி பிரச்சனைக்காக 37 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அதிமுக.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மத்தியில் இடம்பெற்ற கட்சி தான் திமுக.

திமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி இல்லையா? அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி ஆகிவிடுமா? எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.

மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.11,600 கோடி ஒதுக்கியது.

விவசாயிகள் அவதிப்படும்போது எங்கே போனார் டெல்டாக்காரர் ஸ்டாலின்?

முறையாக கொள்முதல் செய்யாததால் மழையால் நெல் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நெல்லினை கூட ஸ்டாலின் நேரடியாக பார்க்கவில்லை.

திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியில்லை. காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. ரூ.1,74,000 கோடி 2ஜி அலைக்கற்றை ஊழல்.

திரவம், சாக்லேட் என பல வடிவங்களில் கஞ்சா தமிழகத்தில் நடமாடுகிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com