சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

கணக்கு போட்டு பார்த்தீர்களா எல்லோரும்., என்ன செய்திருக்காங்க. சத்தமில்லாமல் இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றப்பட்டிருக்கு என்று கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
Geetha Jeevan
கீதா ஜீவன்
Published on

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. அது என்னவென்று தெரியுமா., 500 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தெரிவித்தார்.

கணக்கு போட்டு பார்த்தீர்களா எல்லோரும்., என்ன செய்திருக்காங்க. சத்தமில்லாமல் இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றப்பட்டிருக்கு. மின்சாரக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கு. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்?.

மின் கட்டணம் உயர்வு

சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.

விலைவாசி ஏறுகிறது. எல்லா இடத்திலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. நிறைய இடத்துல யாரும் கேள்வி கேட்க முடியல. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியல. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது.

பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும். வெறுமன வசனம் பேசி நடித்துவிட்டு மேடைல பேசிகிறாரு. அவ்வளவுதான்.

இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்

நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் "தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்.

Premalatha Vijayakanth
பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com