வரலாற்றில் புதிய உச்சம்: அதிரடியாக உயர்ந்த முட்டை விலை!

கடந்த சில தினங்களாகவே முட்டையின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
Egg price increase
Published on

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் குழு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை இன்று மேலும் உயர்த்தி,' ரூ.6.70' ஆக நிர்ணயம் செய்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தின் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே, முட்டை கொள்முதல் விலை இந்த அளவிற்கு ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொடுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த சில தினங்களாகவே முட்டையின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், இன்றைய இந்த அதிரடி உயர்வு பண்ணையாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு:

கோழிகளுக்கான முக்கியத் தீவனங்களான சோளம், சோயா புண்ணாக்கு மற்றும் கருவாடு ஆகியவற்றின் விலை சந்தையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதனால் முட்டை உற்பத்திச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தேவை மற்றும் நுகர்வு அதிகரிப்பு:

தமிழகத்தின் சத்துணவுத் திட்டம், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் முட்டைக்கான நுகர்வு மற்றும் தேவை நடப்பு மாதத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது.

உற்பத்தி சரிவு:

கடுமையான வெயிலின் தாக்கம் மற்றும் தீவனப் பற்றாக்குறை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் முட்டை உற்பத்தி உற்பத்தித் திறனில் லேசான தொய்வு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் ஏற்படப்போகும் தாக்கம்:

நாமக்கல் மண்டலத்தில் பண்ணைக் கொள்முதல் விலையே ரூ.6.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டையின் விலை, அதன் போக்குவரத்து மற்றும் இதர கையாளுதல் செலவுகளையும் சேர்த்து ரூ.7.50 முதல் ரூ.8.50 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்தத் தொடர் விலை உயர்வு நுகர்வோரின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தினாலும், கடந்த சில மாதங்களாகப் பெருத்த நஷ்டத்தில் தவித்து வந்த கோழிப்பண்ணையாளர்களுக்கு இந்த விலை உயர்வு ஓரளவிற்கு நிம்மதியையும், தொழிலைத் தொய்வின்றி நடத்த நம்பிக்கையையும் தந்துள்ளதாகப் பண்ணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com