

சேலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை வாட்டி வதைக்கின்றனர்.
* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத இடமே இல்லை.
* குற்றவாளிகளை காப்பாற்றும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது.
* புதுபுது வித்தைகளை கண்டுபிடித்து கொள்ளையடிப்பவர் செந்தில் பாலாஜி
* தமிழகத்தை சுரண்டும் ஒரு குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல்.
* திமுக ஆட்சியில் கிட்னியை திருடும் நிலை ஏற்பட்டுள்ளது.
* சேலம் மாநகரத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
* தற்போது நடைபெற உள்ள தேர்தல் தமிழகத்தை சுரண்டும் ஒரு குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல்.
* அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.