

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன்.
நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய் 3 அமைச்சர்களை விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால் எந்தப் பயனும் இல்லை.
உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி எறியத் தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி!
தமிழகம் வாழவேண்டும் என்றால் திமுக வீழவேண்டும் என பதிவிட்டுள்ளார்.