'அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி': சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

மாற்றுத்திறனாளிகள், நடைபாதை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
'அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி': சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு
Published on

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தான் அதிமுக.

* அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி.

* கடந்த முறை திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.

* அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

* மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும்.

* ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும்.

* 5 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

* அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகத்திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.

* மாற்றுத்திறனாளிகள், நடைபாதை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* மாற்றுத்திறனாளிகள் புதிய தொழில் தொடங்க கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி வழங்கப்படும்.

* அம்மா இல்ல திட்டத்தில் அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

* முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்.

* இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின மக்கள் சுயமாக தொழில் தொடங்க வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.

* ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.

* எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி அவர்களுடைய பாராட்டை பெற்ற அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.

* அதிமுக ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். போதைப்பொருள் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com