ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.
ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர், சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com