திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உண்டு.
திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
Published on: 

அதிமுகவில் இருந்து தனி அணியாக பிரிந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுக துணையோடு ஆட்சி அமைக்க இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை. திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார்.

இபிஎஸ் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக சி.வி.சண்முகம் கூறியது தவறானது. மாவட்ட செயலாளர் அளிக்கும் பரிந்துரைப்படியே வேட்பாளர்களுக்கு சீட் தந்தார்.

கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உண்டு. கட்சி விதிகளை மீறி சி.வி.சண்முகம் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com