அரசு இல்லத்தை காலி செய்து புதிய வீட்டிற்கு குடியேறினார் இ.பி.எஸ்

தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தை இபிஎஸ் இழந்தார்.
அரசு இல்லத்தை காலி செய்து புதிய வீட்டிற்கு குடியேறினார் இ.பி.எஸ்
Published on

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலி செய்தார்.

செவ்வந்தி என அழைக்கப்படும் இல்லத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி இல்லத்தை காலி செய்தார்.

அமைச்சர், எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்படும் வீடு என்பதால் வீட்டை எடப்பாடி பழனிசாமி காலி செய்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 53 தொகுதிகளில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டதை அடுத்து, அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டில் எடப்பாடி பழனிசாமி பால் காய்ச்சி குடியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com