கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பதவி ஏற்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

கேரள மாநில முதல்வராக சதீசன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கேரளத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சதீசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் வி.டி.சதீஷன் அவர்களுக்கு எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com