புதுக்கோட்டையில் தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சியை நடத்தி வருகிறார்.
Enforcement Directorate
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி செல்லையாவின் மகன் திருக்குமரன். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.மேலும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணையும் வைத்து நடத்தி வருகிறார்

இந்தநிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் இவரது வீட்டில் 7 பேர் கொண்ட 2 அமலாக்கத்துறை குழுக்கள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை

இதேபோன்று கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று புதுக்கோட்டை பெருங்களூருவை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

3 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் உதவியோடு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com