முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து

உலகின் வன்முறைகளும், வெறுப்பும், வறுமையும், கெட்ட போர்களும் அகன்று, மனிதம் மட்டுமே எங்கும் ஆட்சி செய்யும் புத்துலகைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் உயிர்ப்பு பெருவிழாவாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் திருநாள் கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகையாகும். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் திருநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கருணையே வடிவான இயேசு கிறிஸ்துவின் மனிதநேயக் கருத்தியல்களை வாழ்வியல் நெறிகளாகக் கொண்டு நடக்கும் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் வன்முறைகளும், வெறுப்பும், வறுமையும், கெட்ட போர்களும் அகன்று, மனிதம் மட்டுமே எங்கும் ஆட்சி செய்யும் புத்துலகைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com