ஈஸ்டர் திருநாள் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள்.
ஈஸ்டர் திருநாள் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் உயிர்ப்பு பெருவிழாவாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் திருநாள் கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகையாகும். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் திருநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள்.

இத்திருநாளில் அனைவரிடமும் அன்பு, சமாதானம், கருணை, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை வளர்ந்தோங்கி நிலைக்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com