

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதாக திமுக மீது மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் மதிமுக எம்பி துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தேர்தலில் தொகுதிக்கு ரூ.20 கோடி வரை செலவு செய்தும் திமுக தோற்றுவிட்டது.
* திமுக முன்னாள் அமைச்சர்களின் தொகுதிகளில் ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டது.
* மதிமுக உட்பட கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளிலும் ரூ.20 கோடி வரை செலவு செய்யப்பட்டது.
* பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் திமுகவால் வெற்றிபெற முடியவில்லை.
* மதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டனர்.
* திமுக - அதிமுக தான் குதிரைபேரம் நடத்துகின்றன. தவெக ஒருபோதும் குதிரைபேரத்தில் ஈடுபடவில்லை.
* திமுக - அதிமுக - பாஜக சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி நடந்தது.
* முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எம்எல்ஏக்களை களவாட வேண்டிய அவசியமில்லை.
* திமுக, அதிமுக கூட்டணி முயற்சிகளால் தான் எம்எல்ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்கிறார்கள்.
* திமுக, அதிமுக தலைமை மீதான நம்பிக்கையின்மையால் தான் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர்.
* திமுக - தவெக ஒரே அணியில் இணைவது ஏற்புடையதல்ல.
* தவெக தனது கொள்கை எதிரி பாஜக தான் என வெளிப்படையாக அறிவித்து விட்டது.
* பாஜக - அதிமுக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க முற்பட்ட திமுக எப்படி பாஜகவை எதிர்க்கும்.
* பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை அரசு கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இடத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.