போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீது நாளை உத்தரவு..!

போதைபொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.நடிகர் கிருஷ்ணா ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீது நாளை உத்தரவு..!
Published on

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இருவருடைய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இருவருடைய மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது போலீசார் கைது செய்ததாக ஸ்ரீகாந்த் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஜூன் 23ஆம் தேதி ஸ்ரீகாந்தும், 26ஆம் தேதி கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com