அடுத்தகட்ட நடவடிக்கை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒவ்வொரு மாவட்ட கழக செயலாளர்களும் மாவட்டக் கூட்டத்தை கூட்டி கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்ட கழக செயலாளர்களும் மாவட்டக் கூட்டத்தை கூட்டி கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல. மீண்டும் அடுத்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையூட்டி வருகின்றனர்

இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com