Delimitation| 3 நாட்கள் கருப்புக்கொடி பறக்கும்- தி.மு.க.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
Delimitation| 3 நாட்கள் கருப்புக்கொடி பறக்கும்- தி.மு.க.
Published on

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இன்று பகல் 11 மணிக்கு தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று இல்லங்கள் மற்றும் வீதிகளில் ஏற்றப்படும் கருப்புக்கொடிகளை 3 நாட்கள் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com