ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார்
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்
Published on

வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் பயணித்த மூத்த அரசியல் தலைவர் திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர்கள் எங்களது குடும்ப நண்பர்கள் ஆவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அவரை சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com