

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊனமாச்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சி.மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த வருண், தேர்தல் ஆணையத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைந்தநிலையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலர் மணிவாசன் இடம்மாற்றம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.