இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்

நாங்கள் மாற்று அணி என்று சொல்லவில்லை. மாற்று கொள்கை என்று சொல்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இடதுசாரிகள் ஒரு தனி அணியாக செயல்பட தீர்மானித்திற்கிறோம். இதனால்தான் மூன்று இடது சாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழு என்பதை உருவாக்கியுள்ளோம். இடைத்தேர்தலில் அப்போதையை சூழ்நிலையை குறித்து தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து அப்போது பேசுவோம். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இடதுசாரிகள் நாங்கள் மாற்று கொள்கை

நாங்கள் மாற்று அணி என்று சொல்லவில்லை. மாற்று கொள்கை என்று சொல்கிறோம். உழைப்பாளி மக்கள் எதிர்நோக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும்.., வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை குடியிருப்பு பிரச்சினைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.

இவற்றிற்கு எல்லாம் முதலாளித்துவ கட்சிகளால், முதலாளித்துவ கொள்கைளால் தீர்வே கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் இடதுசாரி கொள்கைகளால் மட்டுமே முடியும்.

இந்த ஆட்சி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்பதனால ஆதரவு தரல. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடிவில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்காதது?

முதலமைச்சர் எந்தவித கருத்து குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளிக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசு சார்பில் பதில் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நீங்கள் (செய்தியாளர்கள்) சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலமைச்சர் ஏன் சந்திக்கவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கனும்.

சமூக நீதித்துறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றுதான் இருந்தது. இரண்டு பிரிவினரையும் பிரதிநிதித்துவம் படுத்துவதாகத்தான் இருந்தது. அப்படி இருந்திருக்கலாம். பெயரை ஏன் மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. பெயர் மாற்றிலும், என்ன பெயராக இருந்தாலும் அந்த துறை, அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். பெயர் மாற்றத்தை விவாதிக்க வேண்டியதில்லை. அந்த துறையை சேர்ந்த மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த துறை என்ற செய்யப்போகிறது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதுதான் கவலைப்பட வேண்டிய விசயம்.

இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com