ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொதுஇடமாறுதல் கலந்தாய்வுக்கு இன்று முதல் 24-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித்துறையின் கீழுள்ள கல்லூரிக்கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களின் ('டி' பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் கல்லூரிக்கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ('டி' பிரிவு தவிர்த்து) 2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொதுஇடமாறுதல் கலந்தாய்வுக்கு இன்று முதல் 24-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ('டி' பிரிவு தவிர்த்து) www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெறவேண்டும்.

மேற்கண்ட தகவல் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com