தொடர் விடுமுறை: சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.14 ஆயிரத்தை தாண்டியது

உள்நாட்டு விமான கட்ட ணங்கள், சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு பல மடங்கு உயர்ந்து உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தொடர் விடுமுறை: சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.14 ஆயிரத்தை தாண்டியது
Published on

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர்ந்து நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை தினம் வருகிறது.இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். அதிகமான பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களில், இன்று பயணிகளின் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமான எரிபொருள் விலை அதிகரித்து உள்ளதால் விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தொடர்விடுமுறையால் விமான கட்டணங்கள் எகிறி உள்ளது. சென்னை- தூத்துக்குடி குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,503. ஆனால் இன்றைய கட்டணம் ரூ.14 ஆயிரத்து 418 ஆக உயர்ந்து உள்ளது.இதேபோல் மதுரைக்கு ரூ.12 ஆயிரத்து 337, கோவை- ரூ.6 ஆயிரம், திருச்சி-6ஆயிரத்து 668 ஆக அதிகரித்து இருக்கின்றன. சென்னை- கொச்சிக்கு ரூ.9ஆயிரத்து 207 ஆக கட்டணம் உள்ளது. உள்நாட்டு விமான கட்ட ணங்கள், சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு பல மடங்கு உயர்ந்து உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com