திரு.வி.க நகர் தொகுதியில் போட்டி- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்பு மனு தாக்கல்

தேர்தலுக்கானவேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.
திரு.வி.க நகர் தொகுதியில் போட்டி- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்பு மனு தாக்கல்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com